தஞ்சை மாவட்டம் திருபுவனம் கடைவீதியில் 65 ஆண்டுகளாக ராதாகிருஷ்ணராக அருள்பாவித்து குடி கொண்டுள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் பஜனை மண்டபம் பற்றிய வரலாறு :
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் பிரபல பட்டு வியாபாரியாக விளங்கியவர் திரு. சொக்கலிங்கம் பிள்ளை. இவர் வியாபாரத்தில் அதிக பொருள் ஈட்டினார். சிலரிடம் பணம் இருக்கும் ஆனால் மனம் இருக்காது. வேறு சிலரிடமோ மனம் இருக்கும் பணம் இருக்காது. இதனால் ஏழை எளியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில் இவரது பெற்றோர் இவருக்கு பழனியம்மாள் என்பவரை திருமணம் செய்து வைத்தனர்.
இத்தம்பம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதது பெருங்குறையாக இருந்து வந்தது. இதனால் திரு.சொக்கலிங்க பிள்ளை பெரிதும் வருந்தினார்.தன்னுடைய கவலையை இறைவனிடம், அதுவும் தனக்கு பிடித்தமான கண்ணனிடம் கூறி வணங்கினால் பலன் கிடைக்கும் என திடமாக நம்பினார். கண்ணனை தீவிரமாக வழிபட தொடங்கினர். திருபுவனம் நாகேந்திர பாகவதர் என்ற இவருடைய நண்பர், இவரது இறை வழிபாடு செயலுக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.