CHOKKALINGAM PILLAI  

தஞ்சை மாவட்டம் திருபுவனம் கடைவீதியில் 65 ஆண்டுகளாக ராதாகிருஷ்ணராக அருள்பாவித்து குடி கொண்டுள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் பஜனை மண்டபம் பற்றிய வரலாறு :

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் பிரபல பட்டு வியாபாரியாக விளங்கியவர் திரு. சொக்கலிங்கம் பிள்ளை. இவர் வியாபாரத்தில் அதிக பொருள் ஈட்டினார். சிலரிடம் பணம் இருக்கும் ஆனால் மனம் இருக்காது. வேறு சிலரிடமோ மனம் இருக்கும் பணம் இருக்காது. இதனால் ஏழை எளியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில் இவரது பெற்றோர் இவருக்கு பழனியம்மாள் என்பவரை திருமணம் செய்து வைத்தனர்.

இத்தம்பம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதது பெருங்குறையாக இருந்து வந்தது. இதனால் திரு.சொக்கலிங்க பிள்ளை பெரிதும் வருந்தினார்.தன்னுடைய கவலையை இறைவனிடம், அதுவும் தனக்கு பிடித்தமான கண்ணனிடம் கூறி வணங்கினால் பலன் கிடைக்கும் என திடமாக நம்பினார். கண்ணனை தீவிரமாக வழிபட தொடங்கினர். திருபுவனம் நாகேந்திர பாகவதர் என்ற இவருடைய நண்பர், இவரது இறை வழிபாடு செயலுக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.

1945-ஆம் ஆண்டு சொக்கலிங்கம் பிள்ளை மயிலாடுதுறை சென்றிருந்தபோது கண்ணன் படத்தை விலைக்கு வாங்கி வந்தார். வெண்ணெத் தாழியுடன் கண்ணன் இருக்கும் அந்த படம் தங்க இழைகளால் வடிவமைக்கமைப்பட்ட படமாகும். விலை மதிப்பில்லா அந்த படத்தை வீட்டிற்க்கு கொடுவந்து தனியாக ஒரு அறையில் வைத்து பூஜை செய்து வந்தார். இந்த நிலையில் இவரது பெற்றோர் தமது உறவினரான பத்மாவதி என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து வைத்தனர். கண்ணனினின் அருளால் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க தொடங்கியது. கண்ணா, "மனம் கல் மனம் இல்லை" என்பதை நிரூபிக்கும் விதமாக, இந்தத் தம்பதியருக்கு 7 ஆண் குழந்தைகளும், 4 பெண் குழந்தைகளும் என மொத்தம் 11 குழந்தைகள் பிறந்தனர்.

தன்னுடைய வேண்டுகோளை ஏற்று வரம் அளித்த கண்ணன் மீது மேன்மேலும் பக்தி ஏற்பட்டது . தான் முன்பே சங்கல்பம் செய்து கொண்டதுபோல், 1948 ஆம் ஆண்டு கண்ணனுக்கு என்று தனியாக ஒரு இடம் வாங்கி ஒரு மடம் அமைத்தார். அதற்கான கிரகப்பிரவேசம் 1950-ல் நடத்தினர். இதில் ஆந்திர மாநில கர்னல் சே ஜடு கர் சுந்தர்ராமன் கலந்து கொண்டார். சொக்கலிங்கம் பிள்ளை அடிக்கடி வியாபாரம் தொடர்பாக பல ஊர்களுக்கு செண்டு கொண்டிருப்பார். அந்த வகையில் 1955-ஆம் ஆண்டு டெல்லி சென்றுந்தபோது டெல்லி பிர்லா மாளிகையிலிருந்து ராதாகிருஷ்ணன் சிலையை விலைக்கு வாங்கி வந்து மடத்தில் பிரதிஸ்டை செய்தார். மடத்திற்கு ஸ்ரீ பாண்டுரங்கன் பஜனை மண்டபம் என்று நாமகரணம் சூட்டி, கும்பகோணம் பீர்மன் கோவில் தெரு கண்ணன் பட்டாச்சாரியாரை கொண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தினார்.

பல ஆண்டுகள் கடந்த நிலையில் ராதாகிருஷ்ணன் சிலையும் மடமும் சேதமடைந்த நிலையில் இருந்தது. சொக்கலிங்கம் பிள்ளை மகன்கள் சேர்ந்து மடம் சீரமைக்கப்பட்டது. சொக்கலிங்கம் பிள்ளை மகன்கள் 2002-ஆம் ராஜஸ்தான் சென்ற பொது புதிய பளிங்கு ராதாகிருஷ்ணன் சிலையை கொண்டு வந்து 2003-ஆம் ஆண்டு மடத்தில் பிரதிஸ்டை செய்தார்கள்.

05.09.2003 ஆம் ஆண்டு கோனேரிராஜபுரம் ஸ்ரீ சம்பத் பட்டாச்சாரியார், பாப்பாகுடி ஸ்ரீ வெங்கடேச பட்டாச்சாரியார் ஆகியோரை கொண்டு வைகாசி மாதத்தில் வைதிக முறைகளுடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியாக திருபுவனம் தவமணி மற்றும் சுவாமி மலை மணிமாறன் ஆகியோரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து ராதா கல்யாண வைபவம் ஈ.கே. ஸ்ரீனிவாச பகவதர் அவர்களால் நடத்தப்பட்டது. ஸ்ரீ ராதாகிருஷ்ணன் அருளை பெற பக்தி மற்றும் இசை ஆகிய இரண்டு மட்டுமே என்று உணர்ந்த சொக்கலிங்கம் பிள்ளை, இம்மடத்தில் ஆண்டுதோறும் சம்பிரதாய முறைப்படி பஜனையும், இசை நிகழ்ச்சியும் நடத்தி வந்தார் அதன் விவரம் : 1950-ஆம் ஆண்டு ராதா கல்யாண வைபவத்தையொட்டி திருவிடைமருதூர் வெங்கட்டரமண ஐயர் குழுவினரின் பஜனை தொடர்ந்து 3 ஆண்டுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேப்பெருமாநல்லூர் மீனாட்சி சுந்தர ஐயர் குழுவினரின் பஜனை 4 ஆண்டுகள் நடைபெற்றது.