OUR HISTORY

திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் பிரபல பட்டு வியாபாரியாக விளங்கியவர் திரு. சொக்கலிங்கம் பிள்ளை. இவர் வியாபாரத்தில் அதிக பொருள் ஈட்டினார். சிலரிடம் பணம் இருக்கும் ஆனால் மனம் இருக்காது. வேறு சிலரிடமோ மனம் இருக்கும் பணம் இருக்காது. இதனால் ஏழை எளியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார்.
திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
இவரது பெற்றோர் இவருக்கு பழனியம்மாள் என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இத்தம்பம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதது பெருங்குறையாக இருந்து வந்தது. இதனால் திரு. சொக்கலிங்க பிள்ளை பெரிதும் வருந்தினார். தன்னுடைய கவலையை இறைவனிடம், அதுவும் தனக்கு பிடித்தமான கண்ணனிடம் கூறி வணங்கினால் பலன் கிடைக்கும் என திடமாக நம்பினார். கண்ணனை தீவிரமாக வழிபட தொடங்கினர். திருபுவனம் நாகேந்திர பாகவதர் என்ற இவருடைய நண்பர், இவரது இறை வழிபாடு செயலுக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.
திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
1945-ஆம் ஆண்டு சொக்கலிங்கம் பிள்ளை மயிலாடுதுறை சென்றிருந்தபோது கண்ணன் படத்தை விலைக்கு வாங்கி வந்தார். வெண்ணெத் தாழியுடன் கண்ணன் இருக்கும் அந்த படம் தங்க இழைகளால் வடிவமைக்கமைப்பட்ட படமாகும். விலை மதிப்பில்லா அந்த படத்தை வீட்டிற்க்கு கொடுவந்து தனியாக ஒரு அறையில் வைத்து பூஜை செய்து வந்தார். இந்த நிலையில் இவரது பெற்றோர் தமது உறவினரான பத்மாவதி என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து வைத்தனர்.
திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
தன்னுடைய வேண்டுகோளை ஏற்று வரம் அளித்த கண்ணன் மீது மேன்மேலும் பக்தி ஏற்பட்டது . தான் முன்பே சங்கல்பம் செய்து கொண்டதுபோல் 1948 ஆம் ஆண்டு கண்ணனுக்கு எண்டு தனியாக ஒரு இடம் வாங்கி ஒரு மேடம் அமைத்தார். அதற்கான கிரகப்பிரவேசம் 1950-ல் நடத்தினர். இதில் ஆந்திர மாநில கர்னல் சே ஜடு கர் சுந்தர்raman கலந்து கொண்டார். சொக்கலிங்கம் பிள்ளை அடிக்கடி வியாபாரம் தொடர்பாக வள ஊர்களுக்கு செண்டு கொண்டிருப்பார். அந்த வகையில்
திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
1955-ஆம் ஆண்டு டெல்லி சென்றுந்தபோது டெல்லி பிர்லா மாளிகையிலிருந்து ராதாகிருஷ்ணன் சிலையை விலைக்கு வாங்கி வந்து மடத்தில் பிரதிஸ்டை செய்தார். மடத்திற்கு ஸ்ரீ பாண்டுரெங்கன் பஜனை மண்டபம் என்று நாமகரணம் சூட்டி, கும்பகோணம் பீர்மன் கோவில் தெரு கண்ணன் பட்டாச்சாரியாரை கொண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தினார்.
திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனம் கடைவீதியில் உள்ள பாண்டுரங்கன் பஜனை மடத்தில் ராதா கல்யாண விழா தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவர்க்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
30.04.2013 செவ்வாய் அன்று காலை 08.45 மணியளவில் அஷ்டபதி பஜனையும் (கீத கோவிந்தம்), மாலை திவ்ய நாம பஜனையும்.01.05.2013 புதன் காலை 7.30 மணியளவில் உஞ்சவிருத்தி ஆரம்பம். 12.00 மணியளவில் ராதா கல்யாண பக்த உற்சவம், மதியம் அன்னதானம் வழங்கப்படும்.
திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
10.05.2014 சனிக்கிழமை மாலை 8.45 மணியளவில் அஷ்டபதி பஜனையும் (கீத கோவிந்தம்), வேத பாராயணம், மாலை திவ்ய நாம பஜனைகள்.11.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் உஞ்சவிருத்தி ஆரம்பம், 12.30 மணிக்குள் ராதா கல்யாண பக்த உற்சவம், மதியம் அன்னதானம் வழங்கப்படும்.