பாலக்காடு பிரம்ம ஷேசாத்ரி குழுவினர், ஈரோடு பிரம்ம ஸ்ரீ ராஜாமணி அய்யர் குழுவினர், சிதம்பரம் பிரம்ம ஸ்ரீ முத்துகிருஷ்ணன் குழுவினர், கடலூர் பிரம்ம ஸ்ரீ கோபிநாத் பாகவதர் குழுவினர், கடையநல்லூர் பிரம்ம ஸ்ரீ கோபால அய்யர் குழுவினர், மதுரை பிரம்ம ஸ்ரீ ராமச்சந்திர பாகவதர் குழுவினர் ஆகியோரின் சம்பிரதாய முறையிலான பஜனை நடத்தப்பட்டு வருகிறது, இதே போல் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
1950-ஆம் ஆண்டு பிரபல திரைப்பட பாடகரும், இசை சித்தருமான C .S ஜெயராம் கச்சேரியும், நாச்சியார் கோவில் ராகூப்பிள்ளை தவில் வாத்தியம், துறை ராஜம் குழுவினர் பரதநாட்டியம் ஆகியவை தொடர்ந்து 2 ஆண்டுகள் நடந்தது.
1952-ஆம் ஆண்டு திருவாடு துறை நாதஸ்வர வித்துவான் கக்காய்ப்பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணி பிள்ளை ஆகியோரின் நடேஸ்வரா இன்னிசை நிகழ்ச்சியும், மயிலாடுதுறை சகோதிரிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பிரபல வித்துவான்களின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீ பாண்டுரங்கன் பஜனை மடம் திருபுவனம் கடைவீதியில் அமைந்துள்ளது. இம்மடத்தில் ஆஞ்சிநேயர், கருடன் காவல் தெய்வங்களாக விளங்கும் வகையில் அமைந்துள்ளது. மடத்தை சுற்றி ராதா கிருஷ்ணன் படங்கள் அலங்கரித்த வண்ணம் உள்ளது. இடையே தங்க இழைகளால் ஆனா வெண்ணை தாழியுடன் கண்ணன் இருக்கும் படமும் உள்ளது.
1955-ஆம் ஆண்டு டெல்லி பிர்லா மாளிகையில் வாங்கிய ராதாகிருஷ்ணன் சிலையும், 2002-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் வாங்கிய ராதாகிருஷ்ணன் பளிங்கு சிலையும் பக்தர்களுக்கு இன்றளவும் அருள்பாலித்து கொண்டிருக்கிறது. இச்சிலைகளை கண்டவுடன் நம்மை அறியாமல் மனதில் அமைதி ஏற்படுகிறது. இம்மடத்தின் மகிமை இதுதான் என்கிறார்கள் பக்தர்கள். மடத்தின் அருகில் இனிய நந்தவனமும் அமைந்துள்ளது. தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் பூஜையும், மார்கழி மாதம் முழுவதும் பஜனையும், ஒவ்வொரு ஏகாதேசி நாளிலும் திருமஞ்சனம், சகஷ் ரநாமம் அபிஷேகம், விஷேஷ அலங்காரம், ஒவ்வொரு அஷ்டமி அன்று விஷேஷ அலங்காரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமை ஜனவரி மாதம் கூடாரவல்லி உற்சவமும் நடக்கிறது.
பிரதி ஆண்டு மே மாதம் ராதா கல்யாண மகோத்சவம் 2 நாட்கள் விமர்சையாக நடக்கிறது. முதல் நாள் அஷ்டபதி பஜனை, வேத பாராயணம், இரண்டாம் நாள் காலையில் உஞ்சவிருச்சி, தொடர்ந்து ராதா கல்யாண மகோத்சவம் மற்றும் மதிய நேரத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்று வருகிறது. திருபுவனம் ஸ்ரீ பாண்டுரங்கன் பஜனை மடம், சொக்கலிங்கம் பிள்ளை குடும்பத்தினரின் நிர்வாகத்தின்கீழ் இயங்குகிறது.