ABOUT US

தஞ்சை மாவட்டம் திருபுவனம் கடைவீதியில் 65 ஆண்டுகளாக ராதாகிருஷ்ணராக அருள்பாவித்து குடி கொண்டுள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் பஜனை மண்டபம் பற்றிய வரலாறு :

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் பிரபல பட்டு வியாபாரியாக விளங்கியவர் திரு. சொக்கலிங்கம் பிள்ளை. இவர் வியாபாரத்தில் அதிக பொருள் ஈட்டினார். சிலரிடம் பணம் இருக்கும் ஆனால் மனம் இருக்காது. வேறு சிலரிடமோ மனம் இருக்கும் பணம் இருக்காது. இதனால் ஏழை எளியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில் இவரது பெற்றோர் இவருக்கு பழனியம்மாள் என்பவரை திருமணம் செய்து வைத்தனர்.

இத்தம்பம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதது பெருங்குறையாக இருந்து வந்தது. இதனால் திரு.சொக்கலிங்க பிள்ளை பெரிதும் வருந்தினார்.தன்னுடைய கவலையை இறைவனிடம், அதுவும் தனக்கு பிடித்தமான கண்ணனிடம் கூறி வணங்கினால் பலன் கிடைக்கும் என திடமாக நம்பினார். கண்ணனை தீவிரமாக வழிபட தொடங்கினர். திருபுவனம் நாகேந்திர பாகவதர் என்ற இவருடைய நண்பர், இவரது இறை வழிபாடு செயலுக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.

SEE MORE   >

OUR HISTORY

திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
தஞ்சாவூர் 30-ஏப்ரல்-2013
பிரபல பட்டு வியாபாரியான அமரர் சொக்கலிங்கம் பிள்ளை அவர்களால் 62 ஆண்டுகளாக ராதா கல்யாணம் மகோத்சவம் பல பாகவதர்களாலும், பிரபலமான வித்வான்களாலும், கச்சேரிகள் நடத்தி அன்னதானமும் வழங்கப்பட்டு யாரிடமும் எந்த நன்கொடையும் பெறாமல் நடத்தப்பட்டு வருகிறது.
WATCH   >
திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
தஞ்சாவூர் 02-மே-2013
கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனம் கடைவீதியில் உள்ள பாண்டுரங்கன் பஜனை மடத்தில் ராதா கல்யாண விழா தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவர்க்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
WATCH   >
திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
தஞ்சாவூர் 30-ஏப்ரல்-2013
30.04.2013 செவ்வாய் அன்று காலை 08.45 மணியளவில் அஷ்டபதி பஜனையும் (கீத கோவிந்தம்), மாலை திவ்ய நாம பஜனையும். 01.05.2013 புதன் காலை 7.30 மணியளவில் உஞ்சவிருத்தி ஆரம்பம். 12.00 மணியளவில் ராதா கல்யாண பக்த உற்சவம், மதியம் அன்னதானம் வழங்கப்படும்.
WATCH   >
திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
தஞ்சாவூர் 10-மே-2014
10.05.2014 சனிக்கிழமை மாலை 8.45 மணியளவில் அஷ்டபதி பஜனையும் (கீத கோவிந்தம்), வேத பாராயணம், மாலை திவ்ய நாம பஜனைகள். 11.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் உஞ்சவிருத்தி ஆரம்பம், 12.30 மணிக்குள் ராதா கல்யாண பக்த உற்சவம், அன்னதானம் வழங்கப்படும்.
WATCH   >

VIDEOS

MORE VIDEOS

REACH US

Lingan Silks

119, Kadaiveethi, Thirubuvanam - 612103.
E-mail : janakiraman64@gmail.com, Cell: 9944533328, 9790078209, 8610578052